குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்! – திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்! – திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

இந்த தருணத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது பெண்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்களின் நல்லாட்சிக்கு ஒரு நற்பெயரை இது அளித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கோவிட் 19ஐ முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஊரடங்கைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க செய்திட வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்  ராஜா எம்.சண்முகம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

EDAPPADI-PALANISAMY-89

“கோவிட் 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கையைப் பாராட்டுகிறோம். இதற்கான முழு ஒத்துழைப்பையும் எங்கள் சங்கத்தின் வாயிலாக நாங்கள் அளித்து வருகிறோம். எங்கள் உறுப்பினர்களால் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மற்றும் வெளியில் தங்கி இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் தேவைப்படும் இதர வசதிகளையும் செய்து வருவதுடன், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

இந்த தருணத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது பெண்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்களின் நல்லாட்சிக்கு ஒரு நற்பெயரை இது அளித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கோவிட் 19ஐ முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

tirupur-m-shanmugam

இத்துடன், மதுவிலக்கையும் தொடர்ச்சியாக அமல்படுத்தினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுதல், தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிப்பு, தொழிலாளர்கள் வேலைக்கு வராமை குறைதல், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை நிலவும்.
ஜெயலலிதாவின் தாரக மந்திரமான மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வழியில் ஆட்சிபுரியும் தாங்கள், மதுக்கடைகளை மூடுவது தங்கள் மகுடத்தில் ஒரு மணிக்கல்லாக அமையும்” என்று கூறியுள்ளார்.