குடி குடியை மட்டுமல்ல குழந்தையையும் கெடுக்குமாம் -குவா குவா வேணும்னா குவாட்டர்  வேணாம்.. 

குடி குடியை மட்டுமல்ல குழந்தையையும் கெடுக்குமாம் -குவா குவா வேணும்னா குவாட்டர்  வேணாம்.. 

பெண்கள் கர்ப்ப காலத்தில்  ஆல்கஹால் குடிப்பது குழந்தையை பாதிக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ,  ஆல்கஹால் எடை குறைவான குழந்தை பிறப்புக்கும்  ,குறைவான  அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் வழிவகுக்கிறது..

pregnant

கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் மது அருந்துவது  பிறக்கும்  குழந்தைகளின் மூளைச் செயல்பாட்டை மோசமாக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
‘ பரிசோதனை ஆய்வுகளின்  மதிப்பாய்விலிருந்து குழந்தை  பிறப்பு, எடை மற்றும் நரம்பியல் வளர்ச்சியில் பெற்றோர் அருந்தும்  ஆல்கஹால்  தீங்கு விளைவிக்கும் சான்றுகள்’ என்ற ஆய்வு சர்வதேச தொற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்டது.

pregnent

பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கர்ப்ப காலத்தில் குடிப்பழக்கம் குறித்து வெளியிடப்பட்ட 23 ஆய்வுகளை   மதிப்பாய்வு செய்தனர்.எனவே, கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக வெவ்வேறு ஆய்வு வடிவமைப்புகளின் முடிவுகள் ஒப்பிடப்படுவது இதுவே முதல் முறை.

baby

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுத் தலைவர் டாக்டர் லூயிசா ஜூக்கோலோ, தற்போதைய ஆய்வு   இந்த கருத்தை  உறுதிப்படுத்தியதாகக் கூறியது, “கர்ப்ப காலத்தில் மது அருந்துவது ஒருவரின் குழந்தையின் அறிவாற்றல் திறன்களை அவர்களின் கல்வி உட்பட வாழ்க்கையின் பிற்பகுதியில் பாதிக்கும்” என்று கூறுகிறது.