குடியேறியவர்களை ஆதரியுங்க இல்லைன்னா தொழில்நுட்ப வளர்ச்சியை இழக்க வேண்டியது இருக்கும்…. எச்சரிக்கும் சத்யா நாதெள்ளா

 

குடியேறியவர்களை ஆதரியுங்க இல்லைன்னா தொழில்நுட்ப வளர்ச்சியை இழக்க வேண்டியது இருக்கும்…. எச்சரிக்கும் சத்யா நாதெள்ளா

குடியேறியவர்களை ஆதரியுங்க இல்லைன்னா தொழில்நுட்ப வளர்ச்சியை இழக்க வேண்டியது இருக்கும் என உலக நாடுகளை சத்யா நாதெள்ளா எச்சரிக்கை செய்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் ஹைதராபாத்தை சேர்ந்த சத்யா நாதெள்ளா. இவர் அண்மையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஏதுவாக இருந்தாலும் குடியுரிமை திருத்த சட்டம் மோசமானது என பதில் அளித்தார். நாதெள்ளாவின் பதில் பா.ஜ.க.வுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

சத்யா நாதெள்ளா

மேலும், பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி டிவிட்டரில், கல்வியறிவு பெற்றவர்களுக்கு கூட மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். குடியுரிமை திருத்த சட்டத்தின் முக்கிய காரணம், வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாகும். அமெரிக்காவில் யேசிடிகளுக்கு பதிலாக சிரிய முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்குவது எப்படி? என நாதெள்ளாவுக்கு பதிலடி கொடுத்து இருந்தார். 

வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள்

இந்த நிலையில் சத்யா நாதெள்ளா மீண்டும் ஒரு பரபரப்பான கருத்தை கூறி மீண்டும் உலக நாடுகளை தன்னை பார்க்க வைத்துள்ளார். ப்ளும்பெர்க் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சத்யா கூறியதாவது: நாடுகள் புலம்பெயர்ந்தவர்களை ஈர்க்க தவறினால், சர்வதேச தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை அந்த நாடுகள் இழக்க நேரிடும். ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டு நலனில் உள்ளதை மறுபரிசீலனை செய்கின்றன. அரசாங்கள் அந்த அறிவொளியை தொடர்ந்து பராமரிப்பது அவசியம். அதைபற்றி குறுகிய பார்வையில் சிந்திக்ககூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.