குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு! அசாமில் நடந்த போராட்டத்தில் 3 பேர் பலி

 

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு! அசாமில் நடந்த போராட்டத்தில் 3 பேர் பலி

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் நடந்த போராட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் நடந்த போராட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

குடியுரிமை திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தத்துக்கு அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையும் குவிக்கப்பட்டுள்ளது. அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி, திப்ருகருக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், வரும் 22 ஆம் தேதி வரை அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

assam protest

இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவைக்கு எதிராக அசாமில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.