குடியுரிமை மசோதாவில் தமிழர்களுக்கு மட்டும் ஏன் பாகுபாடு.. மத்திய அரசின் மீது பாயும் கமல்ஹாசன் !

 

குடியுரிமை மசோதாவில் தமிழர்களுக்கு மட்டும் ஏன் பாகுபாடு.. மத்திய அரசின் மீது பாயும் கமல்ஹாசன் !

மக்களவையில் சுமார் 9 மணி நேர வாக்குவாதத்திற்குப் பிறகு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் சுமார் 9 மணி நேர வாக்குவாதத்திற்குப் பிறகு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர்  ஓவைசி அதன் நகலை மக்களவையிலேயே கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். 

ttn

இந்த மசோதா பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்த  ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவிற்கு வந்திருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிகள் மற்றும் கிறித்துவர்கள் உள்ளிட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் என்று தெரிவிக்கிறது.

ttn

ஆனால், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாது என்று எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமின்றி அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இதனை எதிர்த்து இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

ttn

இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இதற்குக் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், “முறையான இனப்படுகொலைக்கு ஆளான தமிழர்களும், பாகுபாட்டை எதிர்கொள்ளும் முஸ்லிம்களும் ஏன் மசோதாவில் இருந்து விலக்கப்படுகிறார்கள்? இது உண்மையிலேயே நன்மை பயக்கும் மசோதா மற்றும் வாக்கு சேகரிக்கும் பயிற்சியாக இல்லாவிட்டால், இந்த CAB ஏன் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் மற்றும் ஸ்ரீலங்காவின் முஸ்லிம்களை அழைத்துச் செல்வதை நிறுத்தக்கூடாது? ” என்று பதிவிட்டுள்ளார்.