குடியுரிமை பெறாதவர்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்… சு.சாமி திட்டவட்டம்!

குடியுரிமை பெறாதவர்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்… சு.சாமி திட்டவட்டம்!

குடியுரிமை பெறாமல் இந்தியாவில் தங்கியுள்ளவர்களை தேடிப்பிடித்து நாடு கடத்துவோம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தள்ளார். இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்துள்ளன. 

subramaniya siva

இந்த நிலையில் சென்னை விமானநிலையம் வந்த பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “இந்திய குடியுரிமை சட்டம் பற்றி முழுமையாக தெரியாமல் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. குடியுரிமை இல்லாதவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம். தி.மு.க அரசியல் செய்வதற்காக இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய குடியுரிமை பெறாமல் இந்தியாவில் தங்கியுள்ள நபர்கள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள். காஷ்மீர் விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் போராடுகிறார்கள். காஷ்மீரில் போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். குறைந்தது டெல்லியிலாவது போராட்டம் செய்திருக்கலாம்.  ஆனால் எதிர்க்கட்சிகள் செய்யவில்லை. இப்போது அமைதியாகிவிட்டார்கள். அதேபோல்தான் இந்த சட்டத்துக்கும் முடிவு இருக்கும்” என்றார்.
காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்து அதை ஏற்று அங்கு சென்ற ராகுல் காந்தி திருப்பி அனுப்பப்பட்டார். உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றே மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி காஷ்மீர் சென்று தங்கள் கட்சி நிர்வாகியை காண முடிந்தது. டெல்லியில் தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இவை எதையும் பொருட்படுத்தாத வகையில் சு.சாமி பேட்டி அளித்துள்ளார் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.