குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்… பதவியைத் தூக்கி எறிந்த ஐ.பி.எஸ் அதிகாரி

 

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்… பதவியைத் தூக்கி எறிந்த ஐ.பி.எஸ் அதிகாரி

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தன்னுடைய ஐ.பி.எஸ் பதவியை மகாராஷ்டிராவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தூக்கி எறிந்து ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தத்துக்கு அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தன்னுடைய ஐ.பி.எஸ் பதவியை மகாராஷ்டிராவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தூக்கி எறிந்து ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தத்துக்கு அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையும் குவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரகுமான் தன்னுடைய ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது குடிமக்கள் திருத்த மசோதா. இந்த மசோதாவுக்கு என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்கிறேன். இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன். நாளை (12 டிசம்பர்) முதல் அலுவலகம் செல்ல மாட்டேன்” என்ற கூறி ராஜினாமா கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.

abdul rahman

இந்த சட்டத்திருத்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, உண்மைக்கு மாறான, தவறான, துளிகூட லாஜிக் இல்லாத பொய்களை தெரிவித்தார். இந்த திருத்தத்தைக் கொண்டுவருவதன் முக்கிய நோக்கமே இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14ன் படி பார்த்தால், “மதத்தின் அடிப்படையில் இது பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள 20 கோடி இஸ்லாமியர்களை பாகுபடுத்திப் பார்க்கின்றனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரகுமான் கடந்த ஆகஸ்ட் மாதமே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துவிட்டதாகவும் ஆனால் அரசு எந்த ஒரு முடிவும் எடுக்காததால் காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.