குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் 88 கோடி சொத்து நாசம்! – இந்திய ரயில்வே தகவல்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் 88 கோடி சொத்து நாசம்! – இந்திய ரயில்வே தகவல்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் காரணமாக இதுவரை 88 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் நாசமாகியுள்ளது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் காரணமாக இதுவரை 88 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் நாசமாகியுள்ளது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

train

வடகிழக்கு, மேற்கு வங்க மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்கள் ரயில்நிலையங்களைத் தாக்கி, ரயிலுக்கு தீவைத்த சம்பவங்கள் அரங்கேறியது.

இந்த நிலையில், இந்த சம்பவங்கள் காரணமாக அதிகபட்சமாக கிழக்கு ரயில்வே மண்டலத்தின் 72 கோடி ரூபாய் சொத்துக்களும், தென்கிழக்கு மண்டல ரயிவேக்கு ரூ.13 கோடியும் வடகிழக்கு ஃபிராண்டியர் மண்டலத்துக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.