குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு- மனம் திறந்து பேசிய அமித் ஷா…

 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு- மனம் திறந்து பேசிய அமித் ஷா…

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்து மத்திய உள்துறை அமித் ஷா வெளிப்படையாக பேசி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 9ம் தேதியன்று தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்து இருந்தார். ஆனால், பிரதமர் நரேந்திர கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக உள்துறை அமைச்சரின் கருத்துக்கும், பிரதமரின் கருத்துக்கும் வேறுபாடு இருந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டம்

இந்நிலையில் உள்துறை அமைச்சர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் எந்தவொரு குடிமக்களின் குடியுரிமையையும் பறிக்காது. குறிப்பிட்ட பிரிவினருக்கு குடியுரிமை வழங்குவதே இதன் நோக்கம். இல்ல எந்தவகையில் இந்த சட்டம் ஒருவரின் குடியுரிமையை பறிக்கிறது என்பதை யாராவது எனக்கு விளக்கட்டும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு

தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது மக்கள்தொகை பதிவு. நாட்டின் வழக்கான குடியிருப்பாளர்களான மக்கள் குறித்த பதிவு. திட்டங்களை வகுக்க தேசிய மக்கள்தொகை பதிவேடு உதவும். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது நீங்கள் எந்த அடிப்படையில் குடிமக்கள் என்பதற்காக ஒவ்வொரு நபரிடம் ஆதாரம் கேட்கப்படும். தேசிய மக்கள்தொகை பதிவேட்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை அல்லது ஒன்று மற்றொன்றில் பங்கு கொண்டு இருக்காது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு

தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறை தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு பயன்படுத்த முடியாது. இரண்டும் மாறுபட்ட சட்டங்கள். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்களை தவறாக வழிநடத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டதால், தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்புகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.