குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது! – அமித்ஷா திட்டவட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது! – அமித்ஷா திட்டவட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வடகிழக்கு பகுதியில் நடந்து வந்த போராட்டமானது, டெல்லி இஸ்லாமியப் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பிறகு மற்ற மாநிலங்களுக்கும் பரவிவிட்டது. இதனால், நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஐஐடி, சென்னை பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறப் போவது இல்லை என்று அமித்ஷா கூறியிருப்பது போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வடகிழக்கு பகுதியில் நடந்து வந்த போராட்டமானது, டெல்லி இஸ்லாமியப் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பிறகு மற்ற மாநிலங்களுக்கும் பரவிவிட்டது. இதனால், நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஐஐடி, சென்னை பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என்று உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். டெல்லி துவாரகாவில் நடந்த பேரணியில் அவர் பேசும் போது, “அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறவும், அவர்கள் மரியாதையுடன் வாழவுமே இந்த திருத்தத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. மாணவர்களுக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது இதில் பயப்பட ஒன்றும் இல்லை. யாருக்கும் அநீதி இழைக்கப்படாது. காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறவோ, அதில் திருத்தம் என்ற சமரசத்தை ஏற்கவோ மாட்டோம்” என்றார்.