குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பெண்களுக்கு பாதிப்பு! – கனிமொழி எச்சரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பெண்களுக்கு பாதிப்பு! – கனிமொழி எச்சரிக்கை

விருதுநகரில் தி.மு.க மகளிர் அணியினர் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க எம்.பி-யும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “இளம் பெண்களுக்கு தற்போது பாதுகாப்பு இல்லை. வீட்டிலும் வெளியிலும் பெண்கள் பல துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட போது பெண்கள்தான் என்று தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் தி.மு.க மகளிர் அணியினர் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க எம்.பி-யும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “இளம் பெண்களுக்கு தற்போது பாதுகாப்பு இல்லை. வீட்டிலும் வெளியிலும் பெண்கள் பல துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

caa-womens.jpg

ஜெயலலிதா ஆட்சியிலாவது பெண்களுக்கு சில நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போதுள்ள ஆட்சியில் பெண்கள் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை.
தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசிடம் விட்டுக்கொடுக்கக் கூடிய ஆட்சிதான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க நடத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் கையெழுத்திட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த சட்டத்தால் மிக மோசமாக பாதிக்கப்படப் போவது பெண்கள்தான்” என்றார்.