குடியுரிமை திருத்தச் சட்டம் அனைவருக்குமே எதிரானது! – சீமான் பேட்டி

 

குடியுரிமை திருத்தச் சட்டம் அனைவருக்குமே எதிரானது! – சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின், தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கத்தில் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்கள் உள்ளிட்ட அனைவருக்குமே எதிரானது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின், தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கத்தில் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தாவது:
“ரூ.250 கோடி கொடுத்து பிரஷாந்த் கிஷோர் போன்ற நபர்களை எங்களால் நியமிக்க முடியவில்லை. இருக்கும் நபர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எப்படி வேலை செய்யலாம் என்று திட்டமிடுவதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற பார்வையே தவறானது. ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்குமே எதிரான பிரச்னை இது.1969ம் ஆண்டுக்குப் பிறகுதான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற வேண்டும், பிறப்பு இறப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் வருகிறது.அப்படிப் பார்க்கும்போது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு,எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை. ஜாதகத்தில் எனக்கு ஒரு தேதியும், பள்ளியில் சேர்க்க ஒரு தேதியும் கொடுத்துள்ளார்கள். நான் குடிமகன் என்பதை நிரூபிக்க என்னுடைய பிறப்பு சான்றிதழுடன், என் பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் அளிக்க வேண்டும்.என் பெற்றோருக்கு அப்படி ஒரு சான்றிதழே இல்லை.அப்படி இருக்கும்போது நான் எப்படி இந்தியக் குடிமகனாக வருவேன், என் தாய் தந்தையர் எப்படி இந்தியக் குடிமக்கள் ஆவார்கள்… எனவே இது ஒரு பேராபத்து. 

rajini-caa.jpg

பூமியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே வாழவேண்டும் என்பது எப்படி நியாயம்? மற்ற மதத்தினத்திரை அனுமதிக்கும் நீங்கள் ஏன் இஸ்லாமியர்களை ஒதுக்குகிறீர்கள்? இது காந்தியின் தேசம், புத்தனின் பூமி.. இங்கு இப்படி நடப்பது அநியாயம்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று ஆணையத்திடம் நான் வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்றுதான் தற்போது ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்றைக்கு தூத்துக்குடிக்குப் போக முடிந்த ரஜினிகாந்தால் இப்போது ஏன் முடியவில்லை? வருமான வரித்துறை ரஜினிகாந்துக்கு ரூ.66 லட்சம் விலக்கு தருகிறது. இந்த விவகாரத்தில் ரஜினிக்கு சலுகை காட்டுவீர்கள்.. ஏன் என்றால் அவர் உங்கள் ஆள். ஆனால் சசிகலாவுக்கு காட்ட மாட்டீர்கள்? ஏன் என்றால் அவர்கள் எங்க ஆள். சசிகலாவுக்கு ஒரு நீதி.. ரஜினிகாந்துக்கு ஒரு நீதி. அவருக்கு சலுகை காட்டுவீர்கள். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வரட்டும் பேசிக்கொள்கிறோம்” என்றார்.