குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி எடப்பாடிக்கு ஒன்றும் தெரியவில்லை! – மார்க்சிஸ்ட் கம்யூ. தாக்கு

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி எடப்பாடிக்கு ஒன்றும் தெரியவில்லை! – மார்க்சிஸ்ட் கம்யூ. தாக்கு

“காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்ற சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்திருப்பது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். அந்த வகையில் இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. 

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

k-balakrishnan

திருவாரூரில் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்ற சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்திருப்பது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். அந்த வகையில் இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. 
இதுவரை ஹைட்ரோகார்பன் எடுக்க கொடுத்த அனுமதி ரத்த செய்யப்படுமா என்பதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவதால் இந்த சட்டம் இயற்றி எந்த பயனும் இல்லை.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அஸ்ஸாம் மாநிலத்தில் 19 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டது எப்படி தெரியாமல் போனது. இந்த சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு, பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி வந்து காப்பாற்றுவாரா. இதன் மூலம் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியவில்லை என்று தெரிகிறது” என்றார்.