குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தியே தீருவோம்! – உக்கிரமான அமித்ஷா

குடியுரிமை திருத்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு மதத்தினரை மட்டும் குறிவைத்துக் கொண்டுவரப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன. இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் உ.பி, டெல்லி, கர்நாடகம் என்று நாட்டின் பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆந்திரா, ஒடிஷா, பஞ்சாப், கேரளா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அனுமதிக்கப் போவது இல்லை என்று கூறிவிட்டன.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

caa-protest

குடியுரிமை திருத்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு மதத்தினரை மட்டும் குறிவைத்துக் கொண்டுவரப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன. இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் உ.பி, டெல்லி, கர்நாடகம் என்று நாட்டின் பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆந்திரா, ஒடிஷா, பஞ்சாப், கேரளா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அனுமதிக்கப் போவது இல்லை என்று கூறிவிட்டன.
இந்த நிலையில் இது குறித்து பேசிய அமித்ஷா, “எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓர் அணியில் திரண்டு வந்தாலும், இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து அரசு இம்மியளவும் பின் வாங்கப் போவதில்லை. இந்த சட்டம் யாரிடம் இருந்தும் இந்தியக் குடியுரிமையைப் பறிக்காது. தவறான தகவல் பரப்புவதன் மூலம் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறது” என்றார்.