குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால் தோல்வி! – முன்னாள் எம்.பி அன்வர் ராஜா அதிரடி தாக்கு

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால் தோல்வி! – முன்னாள் எம்.பி அன்வர் ராஜா அதிரடி தாக்கு

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால்தான் அ.தி.மு.க-வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

anwar

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் அ.தி.மு.க ஆதரவு அளித்தது. அ.தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி-க்கள் மட்டும் ஆதரவு அளிக்காமலிருந்திருந்தால் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. ஆனால், இது எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

edapadi

இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணியைக் காட்டிலும் அ.தி.மு.க குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. பல முறைகேடுகள் நடப்பதாகவும், தி.மு.க பெற்ற வெற்றியை மாற்றி அ.தி.மு.க வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவதாக பரவலாகச் செய்திகள் வந்த நிலையிலும் கூட தி.மு.க-வை முந்த முடியவில்லை. இது குறித்து முன்னாள் தமிழக அமைச்சரும் முன்னாள் எம்.பி-யுமான் அன்வர்ராஜாவிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க பின்னடைவையும் என்னுடைய குடும்பம் தோல்வியையும் தழுவியுள்ளது” என்றார். அன்வர்ராஜாவின் கருத்து அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.