குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மலேசிய பிரதமர் தவறான தகவல்! –  தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மலேசிய பிரதமர் தவறான தகவல்! –  தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி கருத்து கூறிய மலேசிய பிரதமருக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி கருத்து கூறிய மலேசிய பிரதமருக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

pm

இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்திருந்தார். இதுபோன்ற ஒரு சட்டத்தை மலேசியா கொண்டுவந்தால் என்ன ஆகும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கான மலேசிய தூதரை நேரில் அழைத்து தன்னுடைய கண்டனத்தை இந்தியா பதிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

எந்த ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட மாட்டோம் என்ற இருநாட்டு ஒப்பந்தத்தை மீறும் வகையில் மலேசிய பிரதமரின் கருத்து உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் உண்மை பற்றி சரியான புரிதல் இல்லாமல் கருத்து கூற வேண்டாம் என்று அப்போது இந்தியா தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.