குடியுரிமை சட்ட மசோதா : உத்தவ் தாக்கரே கிளப்பும் புதுக் குழப்பம்?

குடியுரிமை சட்ட மசோதா : உத்தவ் தாக்கரே கிளப்பும் புதுக் குழப்பம்?

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் குளிர்கால சட்டசபைக் கூட்டம் இப்போது நாக்பூரில் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி மும்பையில் இருக்கும் சட்டசபையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றி இருந்தார்.அந்த உரைக்கு இப்போது நாக்பூரில் நடக்கும் குளிகால கூட்டத் தொடரில் பதிலளித்து வருகிறார் உத்தவ் தாக்கரே.

அந்த உரையில் அவர் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்திருக்கிறார்.

uddhav

அந்த உரையில் அவர் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்திருக்கிறார்.
‘இப்போது பிஜேபி அரசு கொண்டுவந்து இருக்கும் குடியுரிமைச் சட்டத்தின் படி வெளி நாடுகளில் ( பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ) இருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படி வரும் மக்களை எங்கே குடிவைக்கப் போகிறீர்கள்.எப்படிக் குடிவைக்கப் போகிறீர்கள்.அதற்கு உங்களிடம் திட்டமேதும் கைவசம் இருப்பதாகத் தெரியவில்லையே!?’ என்று கேட்டு ஒரு புதுக்குண்டை வீசி இருக்கிறார். 

bjb

இது இன்னும் விவாதிக்கப்படாத புதிய பாயிண்ட்.வருகிற மக்கள் அவர்களது தாய்மொழி அடிப்படையில் அந்தந்த மாநிலத்தில் குடியேற்றப் படுவார்களா,அவர்களது விருப்பப்படி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாமா.அதுபற்றி அந்தந்த மாநில அரசுகள் மற்றும் மக்களின் கருத்துகள் கேட்கப்படுமா என்பது போன்ற பல கேள்விகள் இனிக்கிளம்பும் என்று எதிர் பார்க்கலாம்.