குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுக்கும் போராட்டம் : டெல்லியில் 144 தடை உத்தரவு !

 

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுக்கும் போராட்டம் : டெல்லியில் 144 தடை உத்தரவு !

மாணவர்களின் மீதான தாக்குதலால் மம்தா பேனர்ஜி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால், மாணவர்கள் வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தியதால் டெல்லி முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றன.

ttn

 

டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை லொயோலா கல்லூரி, நியூ கல்லூரி மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல் வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாணவர்களின் மீதான தாக்குதலால் மம்தா பேனர்ஜி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெறாவிடில் போராட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று அனைத்து மாநில மக்களும் தெரிவிக்கின்றனர். 

ttn

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், 14 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.