குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா ஆதரிக்க மாட்டார் ! நடிகர் சித்தார்த் முதலமைச்சருக்கு எதிராக பதிவு !

 

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா ஆதரிக்க மாட்டார் ! நடிகர் சித்தார்த் முதலமைச்சருக்கு எதிராக பதிவு !

குடியுரிமை சட்டதிருத்த மசோதா 311 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டதிருத்த மசோதா 311 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. 
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tttn

அதாவது இஸ்லாமியர்கள் இல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் 1955 குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சட்டம் தொடர்பாக பல்வேறு கட்சிகளும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து விமர்சித்துள்ள நிலையில் நடிகர் சித்தார்த் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

அதிமுக அரசை தொடர்ந்து எதிர்த்து வரும் நடிகர் சித்தார்த், தனது டிவிட்டர் பதிவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். மேலும் குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரிப்பது அவரது உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக இந்த சட்டத்திற்கு ஆதரவு தந்திருக்கமாட்டார் என்று கூறிய நடிகர் சித்தார்த் அவர் மறைந்த பிறகு அதிமுக கொள்கைகளை பின்பற்றுவதில்லை என பதிவிட்டுள்ளார்.