குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடிய போராட்டக்காரர்கள் பாடிய தேசிய கீதம்

 

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடிய போராட்டக்காரர்கள் பாடிய தேசிய கீதம்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில்,டெல்லியில் உள்ள ஜம்மா மசூதியில் புதன்கிழமை போராட்டத்தில் அநேகர் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில்,டெல்லியில் உள்ள ஜம்மா மசூதியில் புதன்கிழமை போராட்டத்தில் அநேகர் ஈடுபட்டனர். இந்த போராட்டதில் அனைவரும் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் வாசகங்கள் கொண்ட பலகைகளை ஏந்தி இருந்தனர்.இந்த போராட்டம் லால் கு அனில் தொடங்கி சவ்ரி பஜாரை கடந்து ஜம்மா மசூதியின் முதல் வாயிலில் நிறைவடைந்தது. இந்த கூட்டம் மசூதியின் படிகளில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியது. 

protesters

போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த பலகைகளில் அரசிற்கு எதிராக வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது அதில் ‘உங்கள் தேசத்திலிருக்கும் மாணவர்களையே உங்களால் காப்பாற்ற முடியவில்லை இதில் அடுத்த நாட்டு சிறுபாண்மையினரை காப்பாற்றப்போகிறார்களாம்’ என்று எழுதப்பட்டிருந்தது. இறுதியாக இந்தப் போராட்டதை தேசிய கீதத்தை பாடி நிறைவுசெய்தனர். இந்த வீடியோ இணையதளங்களில் சில மணிநேரங்களிலேயே வைரலாகியது.

 

 

ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்ட வீடியோவிற்கு பலரும் ஆதரவை தெரிவிக்கும் வகையில் தங்கள் கமெண்ட்டுக்களை பதிவிட்டு ரீ ட்வீட்டும் செய்திருக்கிறார்கள். 

 

 

இந்த போராட்டத்தில் டெல்லியை சேர்ந்த பலரும் ஈடுபட்டு JNU மாணவர்களுடன் இணைந்தார்கள். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஊடகங்களிடம் “எங்கள் சீக்கிய,இஸ்லாமிய,ஹிந்து மற்றும் இதர குடிகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் எங்கு செல்லுவார்கள்? எங்களிடம் டாக்குமெண்ட்ஸ் இருக்கிறது இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்… எங்கு போவார்கள் என்பதை நினைத்தாலே கலக்கமாய் உள்ளது” என்று  உணர்ச்சிபொங்க தெரிவித்தார்.