குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்தது அதன் கொள்கைக்கு எதிரானது! – இ.கம்யூ விமர்சனம்

குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்தது அதன் கொள்கைக்கு எதிரானது! – இ.கம்யூ விமர்சனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்திருப்பது அதன் தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்திருப்பது அதன் தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் அ.தி.மு.க ஆதரவு அளித்தது. அக்கட்சியின் எம்.பி பாலசுப்பிரமணியன் அதிகாரி ஒருவர் போனில் தெரிவித்தார். வாக்களித்தோம் என்று வெளிப்படையாகவே உண்மையை போட்டுடைத்தார்.

bala mp

ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இதைப் பற்றி பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மட்டுமே முக்கியம் என்று செயல்பட்டு வருகின்றனர். ஆனால், இந்த சட்டம் மட்டும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வந்திருந்தால் இலங்கையின் கண்டியில் பிறந்த அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு கூட குடியுரிமை கிடைத்திருக்காது என்று சமூக ஊடகங்களில் அ.தி.மு.க-வை நெட்டிசன்கள் வறுத்து வருகின்றனர்.

mgr

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் இது குறித்து கூறுகையில், “திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவை அ.தி.மு.க ஆதரித்திருப்பது அவர்கள் பின்பற்றும் தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி வரலாற்றுப் பிழை செய்துவிட்டார்” என்றார்.