குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 35 போலீசாரை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற வன்முறை கும்பல் – உ.பி. போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..

 

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 35 போலீசாரை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற வன்முறை கும்பல் – உ.பி. போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, வன்முறை கும்பல் ஒன்று 35 போலீசாரை உயிரோடு எரித்து கொல்ல முயன்றதாக மீரட் எஸ்.பி. குற்றச்சாட்டியுள்ளார். மேலும் அது தொடர்பான வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய கொண்டு வந்தது. இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பொதுமக்களில் ஒரு பகுதியினரை திரட்டி நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. உத்தரப் பிரதேசத்திலும் இந்த போராட்டங்கள் நடந்தன. சில போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன.

வன்முறையில் ஈடுபட்ட கும்பல்

இந்நிலையில், கடந்த மாதம் 20ம் தேதியன்று மீரட்டில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக வெடித்தபோது, போலீசார் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்களை ஒரு கும்பல் ஒரு கட்டிடத்தில் அடைத்து உயிரோடு எரித்து கொல்ல முயன்ற சம்பவத்தை மீரட் எஸ்.பி. அகிலேஷ் நாராயன் சிங் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான 2 வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

வன்முறையாளர்களை விரட்டியத்த போலீசார்

இது தொடர்பாக மீரட் எஸ்.பி. அகிலேஷ் கூறுகையில், கடந்த 20ம் தேதியன்று நிசாரி கேட் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்தது. அந்த சமயம் போலீசாரும், பத்திரிகையாளர்களும் ஒரு கடையில் உள்ளே அமர்ந்து இருந்தனர். அப்போத வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து கொண்ட வந்த வன்முறை கும்பல் ஒன்று கடையின் ஷட்டரை சாத்தினர். பின் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் தீ வைத்தனர். அதிக படைகள் அங்கு வந்த பிறகே போலீசாரையும், பத்திரிகையாளர்களையும் காப்பாற்ற முடிந்தது. இந்த வீடியோக்கள் உண்மையானது.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.