குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு : கமல்ஹாசன் பேட்டி !

 

குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு : கமல்ஹாசன் பேட்டி !

குடியுரிமை சட்டத்திருத்திற்கு முன்னர் குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ” குடியுரிமை சட்டத்திருத்திற்கு முன்னர் குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ttn

இதனைக் கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு. சட்டங்கள் இரும்பு காய்ச்சி ஊற்றியது இல்லை, மாற்றம் செய்ய முடியாமல் இருக்க. அவை, மக்களுக்காகக் கொண்டு வரப்பட்டவை. தேவை பட்டால் அதில் மாற்றம் செய்து கொள்ளலாம். குடியுரிமை சட்டத்திருத்தத்தில் மாற்றம் நிகழும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். 

ttn

அதனைத் தொடர்ந்து, நடிகர்களுக்கு அதிகமாகச் சம்பளம் வழங்கப் படுகிறது என்று பேசப்படுகிறது. நான் ஆரம்பத்தில் ரூ.250 சம்பளத்திற்கு வேலைக்கு வந்தேன். சம்பளம் அதிகமாகக் கிடைப்பது இட்லி போலத் தான். திறமை தான் சம்பளத்தின் விலையைக் கூட்டுகிறது. அதே போல, மக்களின் பாராட்டால் தான் சம்பளம் அதிகமாகிறது. சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் போராடும் ஜே.என்.யு. மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகமாகி வருகிறது. இது தொடர்ந்து நடந்தால், நாம் எதிர்பார்த்தது நடந்து விடுமோ என்று கூறினார்.