குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: ஜெர்மனி மாணவரையடுத்து நார்வே பெண்ணும் வெளியேற்றம்!

 

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: ஜெர்மனி மாணவரையடுத்து நார்வே பெண்ணும் வெளியேற்றம்!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நார்வே நாட்டைச்சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநில கொச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நார்வே நாட்டைச்சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கலந்து கொண்டார். விசா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் கலந்துகொண்டதால் போராட்டத்தில் கலந்துகொண்டதால் ஜென்னி மெட்டே என்ற பெண்ணை இந்திய வெளியுறவுத்துறையினர் நாட்டை விட்டு வெளியேற்றினர். நார்வேவுக்கே திரும்பிச்சென்ற ஜென்னி போராட்டத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். 

Janne

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை ஐஐடியில் இறுதியாண்டு படித்துவந்த ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த மாணவர், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.