குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக பேரணி.. 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு !

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக பேரணி.. 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு !

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

tttn

திமுக பேரணி நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜனநாயக நாட்டில் உரிமைக்காக நடத்தும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியது. காவல்துறை தடையை மீறி போராட்டம் நடைபெறுவதால் அதனை கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. 

ttn

அதன்படி, திமுக கூட்டணி காட்சிகளின் பேரணி சென்னை எழும்பூரில் இருந்து தொடங்கியுள்ளது. இந்த பேரணியால் சென்னை எழும்பூர் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் 5000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதி மன்ற உத்தரவின் படி, பேரணியைக் கண்காணிக்க  முக்கிய சந்திப்பு மற்றும் மாடிகளில் 110 கேமராக்கள். 4 ட்ரோன்கள் மூலம் பேரணி பதிவு செய்யப்பட்டு வருகிறது.