குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ! குஷ்பு, பிரியங்கா சோப்ரா எதிர்ப்பு !

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ! குஷ்பு, பிரியங்கா சோப்ரா எதிர்ப்பு !

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்க குஷ்பு, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து குஷ்பு டிவிட்டரில், குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவை சிதைக்கக் கூடியது. அதிகாரம் படைத்தவர்களால் தேசத்தின் எதிர்காலம் சிதைவதை பொறுக்க முடியாது. அனைவரும் மாணவர்களுக்கு துணையாக இருப்போம். அகதிகள் என்று யாரை அழைக்கிறீர்களோ அவர்கள்தான் உங்களுக்கு ஓட்டு போட்டனர். நாடு மத சார்பின்மையால் இயங்குகிறதே தவிர மதத்தினால் அல்ல. இந்த பிரச்சினையில் குரல் கொடுத்துள்ள கமல்ஹாசனை வாழ்த்துகிறேன்.  என்று குறிப்பிட்டுள்ளார். 

இதைப்போல் நடிகை பிரியங்கா சோப்ரா,  ஒவ்வொரு குழந்தையின் கனவாக இருப்பது கல்வி. அவர்கள் சுயமாக சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே கல்வி கற்பிக்கப்படுகிறது. ஜனநாயகத்தில் அமைதியான முறையில் குரல் எழுப்பலாம். அப்படி குரல் எழுப்புபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது தவறானது. என்று குறிப்பிட்டுள்ளார். 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும், முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
போராட்டங்கள் வன்முறையாக மாறி தடியடி, வாகனங்கள் எரிப்பு, துப்பாக்கிச்சூடு என தீவிரம் அடைந்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் கல்வி நிறுவனங்கள் பல காலவரையரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை சித்தார்த், மம்முட்டி, பிருதிவிராஜ், அமலாபால், பார்வதி உள்ளிட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள் ஏற்கனவே கண்டித்துள்ளனர்