குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் 101 வயது காந்தியவாதி!

 

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் 101 வயது காந்தியவாதி!

பெங்களூரு ஃபிரீடம் பார்க்கில் உள்ளூர் மாணவர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை ஒழுங்கு செய்து இருந்தார்கள். எதிர்பார்த்ததை விட நல்ல கூட்டம் இருந்தது.ஆனால்,அவர்கள் யாரும் எதிர்பாராத விதமாக அந்த உண்ணாவிரதப் போராட்ட பந்தலுக்கு வந்தார் ஹெச்.எஸ்.துரைசாமி என்கிற ஹரோஹல்லி ஸ்ரீனிவாச துரைசாமி!.

பெங்களூரு ஃபிரீடம் பார்க்கில் உள்ளூர் மாணவர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை ஒழுங்கு செய்து இருந்தார்கள். எதிர்பார்த்ததை விட நல்ல கூட்டம் இருந்தது. ஆனால்,அவர்கள் யாரும் எதிர்பாராத விதமாக அந்த உண்ணாவிரதப் போராட்ட பந்தலுக்கு வந்தார் ஹெச்.எஸ்.துரைசாமி என்கிற ஹரோஹல்லி ஸ்ரீனிவாச துரைசாமி!.

அவர் பெங்களூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வரலாற்று சின்னம். 1918-ம் வருடம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி  ஸ்ரீநிவாச அய்யர் பத்மாவதி தம்பதியின் மகனாக பிறந்த துரைசாமிக்கு இப்போது வயது 101.பெங்களூரு செண்ட்டர் காலேஜில் பி.எஸ்ஸி படிப்பை துரைசாமி முடித்தது.1942-ல்.அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து டைம் பாம் செய்து அரசு ஆவணங்களை கொளுத்தி சிறை சென்றதுதான் அவரது முதல் அரசியல் செயல்பாடு.

 

சிறையில் இருந்து வெளிவந்ததும் காந்தியவழி போராட்டங்களில் கலந்து கொண்ட துரைசாமி,இன்றுவரை பெங்களூருவில் நடைபெற்ற எந்த மக்கள் நலப் போராட்டத்திலும் கலந்துகொண்டு தனது எதிர்ப்பைக் காட்டத்  தவறியதில்லை. கடந்த 2014-ம் ஆண்டு நில ஆக்கிரமிப்பை எதிர்த்து பெங்களூரு டவுன்ஹாலில் நடைபெற்ற போராட்டத்திலும் துரைசாமி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த 101 வயது போராளியின் இருப்பே இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக இருந்தது.கடைசி வரை அவர்களுடன் அமர்ந்திருந்து இளநீர் குடித்து உண்ணா விரதத்தை முடித்துக் கொண்ட துரைசாமி ‘ இப்போது காந்தி இருந்திருந்தால், நிச்சயமாக இந்த குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தும்,காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கத்தை எதிர்த்தும் சத்யாகிரஹத்தில் ஈடுபட்டு இருப்பார்’ என்று தெரிவித்தார்.

இந்தச் செய்தியும் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியான உடன் துரைசாமிக்கு இணைய உலகில் பாராட்டு குவிகிறது.