குடியரசுத் தலைவர் விருது பெறும் கக்கன் பேத்தி ராஜேஸ்வரி ஐ.பி.எஸ்!

 

குடியரசுத் தலைவர் விருது பெறும் கக்கன் பேத்தி ராஜேஸ்வரி ஐ.பி.எஸ்!

டெல்லியில் நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரெண்டு ராஜேஸ்வரிக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட உள்ளது.

தமிழக சிலை கடத்தல் பிரிவு சூப்பிரெண்டாக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. சிறப்பாக பணியாற்றியதற்காக இவருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை (26ம் தேதி) நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவில் இந்த விருதை ராஜேஸ்வரிக்கு வழங்குகிறார்.

ராஜேஸ்வரி தமிழக முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனின் பேத்தியாவார். கக்கனின் மூன்றாவது பெண் கஸ்தூரி சிவசாமியின் மகள்தான் ராஜேஸ்வரி. ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற ராஜேஸ்வரி மதுரையில் சி.பி.சி.ஐ.டி-யில் பணியாற்றி வந்தார். பிறகு சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.   

சிறப்பான சேவைக்கான குடியரசுத்தலைவரின் விருது 93 பேருக்கும் (தமிழ்நாடு-3), பாரட்டுதலுக்குரிய சேவைக்கான காவலருக்கான விருது 657 பேருக்கும் (தமிழ்நாடு 21) வழங்கப்படவிருக்கிறது. 2020ம் ஆண்டுக்கான அதிகமான விருதுகளைப் பெறும் ‘மாநிலமாக’ ஜம்மு காஷ்மீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.