குடியரசுத் தலைவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா? பாஜகவை வச்சி செய்யும் சிவசேனா

 

குடியரசுத் தலைவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா? பாஜகவை வச்சி செய்யும் சிவசேனா

56 இடங்களைக் கைப்பற்றியுள்ள சிவசேனா  ஆட்சியில் சமபங்கு கோரி பாஜகவிடம்  மல்லுக்கட்டி வருகிறது

மும்பை: மகாராஷ்டிராவில்  தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவார காலத்தை எட்டியுள்ள  நிலையிலும் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக – சிவசேனா மத்தியில் மோதல் நிலவி வருகிறது. 

shivsena

மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கடந்த மாதம் 24ஆம் தேதி தேர்தல் முடிவுகள்  வெளியாகின. அதில் மொத்தம்  288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் தனித்து ஆட்சியமைப்பதற்கான சூழல் பாஜகவுக்கு கிட்டவில்லை. இதனால்  56 இடங்களைக் கைப்பற்றியுள்ள சிவசேனா  ஆட்சியில் சமபங்கு கோரி பாஜகவிடம்  மல்லுக்கட்டி வருகிறது. ஆனால்  சிவசேனாவின் கோரிக்கையை பாஜக நிராகரித்துள்ளது.

ttn

மேலும் பாஜக மூத்த தலைவர் சுதீர் முங்கத்திவார், நவம்பர் 7ஆம் தேதிக்குள் ஒருமுடிவுக்கு வராவிட்டால் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி  நடைபெறும் என்று பேட்டியளித்தார். இதற்கு சிவசேனா தன் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில், ‘குடியரசுத் தலைவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா? என்று சாடியுள்ளதுடன், நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு பாஜகதான் காரணம் என்றும் விமர்சித்துள்ளது. இருகட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் மகாராஷ்டிராவில்  ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.