குடிமக்கள் பற்றிய அனைத்து தகவலும் ஒரே இடத்தில்… இலங்கையில் வருகிறது அதிரடி!

 

குடிமக்கள் பற்றிய அனைத்து தகவலும் ஒரே இடத்தில்… இலங்கையில் வருகிறது அதிரடி!

இலங்கை குடிமக்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும்படியான டேடா சென்டரை உருவாக்கும்படி கோத்தபய ராஜபக்‌ஷே உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை குடிமக்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும்படியான டேட்டா சென்டரை உருவாக்கும்படி கோத்தபய ராஜபக்‌ஷே உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (டிச.30) தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பிறகு கோத்தபய ராஜபக்‌ஷே கூறுகையில், “இலங்கை குடிமக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து தகவலும் ஒரே இடத்தில் பதிவு செய்யும்படியான நேஷனல் டேடா சென்டர் ஒன்றை உருவாக்க வேண்டும். பிறப்பு, இறப்பு, அடையாள அட்டை, வாகன ஓட்டுவதற்கான லைசன்ஸ், குடிவரவு, வெளிநாட்டுக்குக் குடிபெயர்வு உள்ளிட்ட தனிநபர் பற்றிய தகவல் அனைத்தும் அந்த அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். பொது மக்கள் தொடர்பான தகவலைத் திரட்டுவது செலவுமிக்கதாக இருந்தாலும், எதிர்காலத்தில் இது நேரத்தை மிச்சப்படுத்தும். பல தகவலை தனித்தனி அமைச்சகங்கள் சேகரித்து வைப்பதற்கு பதில் ஒரே இடத்தில் வைப்பதன் மூலம் நிறைவான சேவையை அளிக்க முடியும். பொய்யான, பொருத்தமில்லாத தகவல் பரிமாற்றத்தையும் தடுக்க முடியும்” என்று அவர் கூறினார்.