‘குடி’மக்களுக்கு ஓர் நற்செய்தி! போன் செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும் மதுபானம்!

‘குடி’மக்களுக்கு ஓர் நற்செய்தி! போன் செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும் மதுபானம்!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் துபாயில் அனைத்து வணிகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் “குடி”மக்களுக்கு நற்செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் துபாயில் அனைத்து வணிகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் “குடி”மக்களுக்கு நற்செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.

துபாயில் வசிக்கும் முஸ்லீம் அல்லாதவர்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வந்தவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய மதுபான விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு மேற்பட்ட துபாயில் வசிக்கும் முஸ்லீம் அல்லாதவர்கள் மதுபான உரிமம் பெற்றிருந்தால் மதுபானம் வாங்கி அருந்த முடியும்.  அதே நேரத்தில் மதுபானம் அருந்திவிட்டு வெளியில் நடமாடினால் கைது செய்யப்படுவார்கள் எனும் சட்டமும் உள்ளது.

wine

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லீம் அல்லாத மதுபான உரிமை வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் வீட்டிற்கே மதுபானம் சப்ளை செய்ய https://www.legalhomedelivery.com/எனும் இணையதளத்தில் சென்று ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மதுபான உரிமம் இல்லாதவர்கள் https://mmiliquorlicence.com/ அல்லது http://www.alcohollicencedubai.com/ எனும் இணையதளத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.