குடிமகன்கள் நல்ல சரக்கு குடிக்க டில்லி அரசு அதிரடி நடவடிக்கை….

 

குடிமகன்கள் நல்ல சரக்கு குடிக்க டில்லி அரசு அதிரடி நடவடிக்கை….

தலைநகர் டெல்லியில் 8 நாட்களுக்கு மேலான மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என பார்களுக்கு டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மதுபானங்கள் விற்பனை எப்போதும் களைகட்டும். புத்தாண்டு சமயத்தில் ஒரு நாளைக்கு ரூ.30 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாககும். மேலும் ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகும். மதுபானங்கள் விற்பனையை ஒழுங்கு படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

பார்

இந்நிலையில், மதுபானம் கலப்படம், திருட்டு, புதிய பாட்டிலில் பழைய சரக்கை மீண்டும் நிரப்புதல் போன்றவற்றை தடுக்கும் நோக்கிலும், குடிமகன்கள் தரமான சரக்குகளை மட்டுமே குடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் அம்மாநில கலால் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது 8 நாட்களுக்கு மேலான மதுபானங்களை உடனே அழித்து விட வேண்டும் என பார்கள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் முதல் இது அமலுக்கு வருகிறது.

பார்

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதைய நடவடிக்கையின்படி, பார்கள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்கள் எட்டு நாட்களுக்கு மேல் மதுபானங்களை கையிருப்பு வைத்து இருக்க கூடாது. விதிமுறையை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். மேலும் சட்டவிரோத விற்பனையை தடுக்கவும் மற்றும் பழைய சரக்குகளை பாட்டில்களில் நிரப்புவது போன்றவற்றை தடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து மதுபானம் கலப்படத்தையும் தடுப்போம் என கூறினார்.