குடிமகன்களை கஞ்சாவுக்கு அடிமையாக்கும் கூட்டம் – போதைக்காக பாதை மாறும் மதுப்பிரியர்கள்

குடிமகன்களை கஞ்சாவுக்கு அடிமையாக்கும் கூட்டம் – போதைக்காக பாதை மாறும் மதுப்பிரியர்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சென்ற ஞாயிற்று கிழமையன்று பிற்பகல் 2 மணியளவில் ஹரிஷ், ராஜேஷ் என்ற இரு வாலிபர்கள்  பெங்களூரு -மைசூரு சாலையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு அருகே ஒரு காரில் கஞ்சா அடித்துவிட்டு போதையிலிருந்தனர்.

கொரானா பரவுவதை தடுக்க மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கால் ஒயின் ஷாப்புகள் மூடப்பட்டுள்ளதால் ,குடிமகன்களுக்கு சரக்கு கிடைக்காததால் அவர்களுக்கு கஞ்சா வழங்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சென்ற ஞாயிற்று கிழமையன்று பிற்பகல் 2 மணியளவில் ஹரிஷ், ராஜேஷ் என்ற இரு வாலிபர்கள்  பெங்களூரு -மைசூரு சாலையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு அருகே ஒரு காரில் கஞ்சா அடித்துவிட்டு போதையிலிருந்தனர்.

weed

அப்போது அந்த குடியிருப்பில் வசிக்கும் சிலர் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு கார் நிற்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களின் காரை சோதனை செய்ததில் ,காருக்குள் 110கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
அந்த நேரத்தில் அந்த வாலிபர்களும் கஞ்சா அடித்திருந்தனர். போலீசார் இது பற்றி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சில வாடிக்கையாளர்களுக்கு அதை கொடுக்க அங்கு காத்திருந்ததாக கூறினார்கள். மேலும் இப்போது ஒயின் ஷாப் மூடப்பட்டுள்ளதால் போதைக்காக பலர் கஞ்சாவை நாடுவதாகவும், அதனால் நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பதாகவும் அவர்கள் கூறினார்கள் .உடனே போலீசார் அவர்களை கைது செய்து, போதை வழக்கு அவர்களின் மேல் பதிவு செய்தனர்.