குடிமகன்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக் என்னென்னு தெரியுமா?

 

குடிமகன்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக் என்னென்னு தெரியுமா?

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு  தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு  தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

vote

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது.

ec

இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியது.அதில், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு  எண்ணிக்கை அன்று மதுபான கடைகள் மூடப்பட  வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

tasmac

அதன்படி  டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளார். அந்த வகையில், 16, 17 மற்றும் வாக்குப்பதிவு நாளான 18 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23 ஆம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: ‘99’ ஆக மாறிய ராம்-ஜானு: சகட்டு மேனிக்கு கலாய்க்கும் நெட்டிசன்கள்!