குடிமகன்களின் பரிதாப நிலையை கண்டு மனம் இறங்கிய மாநிலங்கள்… இன்று முதல் மீண்டும் மதுகடைகள் திறப்பு

 

குடிமகன்களின் பரிதாப நிலையை கண்டு மனம் இறங்கிய மாநிலங்கள்… இன்று முதல் மீண்டும் மதுகடைகள் திறப்பு

அசாம் மற்றும் மேகலாயாவில் இன்று முதல் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. மது கடையை திறக்க வேண்டும் என அதிகளவில் கோரிக்கை வந்ததையடுத்து இந்த முடிவை அந்த மாநிலங்கள் எடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியமான மளிகை, மருந்து உள்ளிட்ட கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறக்க வேண்டும். ஊரடங்கால் மது கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

மதுபான கடை

மது கிடைக்காததால் சில குடிமகன்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். தீங்கு விளைவிக்கும் பொருட்களை குடித்து உயிருக்கு போராடுகின்றனர். சில மாநிலங்களில் மது கடைகளை திறக்க வேண்டும் பலத்த கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் அசாம் மற்றும் மேகலாயாவில் ஊரடங்கு முடிவடைதற்கு ஒருநாள் முன்னதாக இன்று முதல் மதுகடைகளை திறக்க அம்மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

மதுபான கடை

இது தொடர்பாக அசாம் மாநிலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 13ம் தேதி (இன்று) முதல் மதுகடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்கிறது. மாநில சுகாதார துறையின் விதிமுறைகளை பின்பற்றி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மேகலாயா அரசு ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை மட்டுமே மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மதுகடைகள் திறந்து இருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.