குடிமகன்களின் காலில் விழுந்து மதுக்கடைக்கு எதிராக ஆதங்கத்தை தெரிவிக்கும் திமுகவினர்.. வீடியோ உள்ளே!

 

குடிமகன்களின் காலில் விழுந்து  மதுக்கடைக்கு எதிராக ஆதங்கத்தை தெரிவிக்கும் திமுகவினர்.. வீடியோ உள்ளே!

மது வாங்குவதற்கு இன்று காலை முதலே குடிமகன்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டனர். 

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட,  கொரோனா வைரஸ் அதிகமாக பரவியுள்ள சென்னை காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் டாஸ்மாக்குகள் தவிர மற்ற அனைத்து டாஸ்மாக்குகளும் இன்று திறக்கப்பட்டு விட்டன. மது வாங்குவதற்கு இன்று காலை முதலே குடிமகன்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டனர். 

ttn

இதற்கு எதிர்ப்பு  திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில், இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க ஸ்டாலின் இல்லத்தின் வாசலில் கருப்பு உடை அணிந்து, டாஸ்மாக்குகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்திய படி போராட்டம் நடைபெற்றது. அதில் உதயநிதி ஸ்டாலினும், துர்கா ஸ்டாலினும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் மு.க ஸ்டாலின் அவரது தொண்டர்களையும் கருப்பு சின்னம் ஏந்தி மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கூறினார். அவரின் வழிகாட்டுதலின் படி பல மாவட்டங்களில் திமுகவினர் கருப்பு சின்னம் அணிந்து மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுக  இளைஞரணி சார்பில் அதன் உறுப்பினர்கள்,  குடிமகன்களின் காலில் விழுந்து மதுக்கடைக்கு எதிராக ஆதங்கத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் வெளிப்படுத்தினர். அந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.