குடிபோதையில் வாகனம்; ரூ.25 லட்சம் அபராதம் வசூல்!

குடிபோதையில் வாகனம்; ரூ.25 லட்சம் அபராதம் வசூல்!

மதுரை நகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த செப் 1 முதல் செப்.9 வரை 251 நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. புதிய வாகன சட்டத்தின்படி, பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக, இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் சாலையில் வாகனம் சென்றால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், 3 மாதம் வரை சிறைத்தண்டனையும் விதிக்கமுடியும். மீண்டும் அதே விதிமுறை மீறலில் ஈடுபட்டால்  அபராதமாக ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும் மேலும் 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.

auto

கடுமையான அபராத தொகைக்கு பயந்தே வாகனம் வைத்திருப்பவர்கள் சாலை விதிமுறை மற்றும் வாகன சட்டத்தை முறையாக பின்பற்றுகின்றனர். அந்தவகையில் மதுரை நகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த செப் 1 முதல் செப்.9 வரை 251 நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  அபராத தொகை செலுத்தி வீணடிக்காமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழுமாறும் மதுரை மாநகர் போலீசார் அறிவித்துள்ளனர்.