குடிநீர் கேட்டு போராடினால் கைது செய்வதா? உயர்நீதிமன்றம் காட்டம் 

குடிநீர் கேட்டு போராடினால் கைது செய்வதா? உயர்நீதிமன்றம் காட்டம் 

குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது குற்றவழக்குகள் பதிவு செய்வது என்பது அரசின் பக்குவமின்மையை வெளிப்படுத்துகிறது என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது குற்றவழக்குகள் பதிவு செய்வது என்பது அரசின் பக்குவமின்மையை வெளிப்படுத்துகிறது என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த பழையகோட்டை கிராமத்தில், கடந்த 2017ஆம் ஆண்டு குடிநீர் வழங்க கோரி போராடிய 32 பேர் மீதான வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 32 பேருக்கு எதிரான வழக்கு காங்கேயம் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்தது. இந்த வழக்கால்  இரண்டாம் நிலை காவலர் பணி வாய்ப்பை இழந்த நித்தியானந்தம் என்பவர் வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 

Protest

நீண்ட காலமாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான போராட்டம் மூலமாகவே வெளிப்படுத்துவார்கள். அதை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்காமல் வழக்குப்பதிவு செய்வது அரசின் பக்குவமின்மையை காட்டுகிறது எனக்கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.