குடிநீருக்காக கூட பிளாஸ்டிக் கூடாது ! கண்ணாடி குடுவையில் மட்டுமே குடிநீர் ! திருப்பதி தேவஸ்தானம் அதிரடி !

 

குடிநீருக்காக கூட பிளாஸ்டிக் கூடாது ! கண்ணாடி குடுவையில் மட்டுமே குடிநீர் ! திருப்பதி தேவஸ்தானம் அதிரடி !

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குடிநீருக்காக பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குடிநீருக்காக பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஜல பிரசாதம் என்று பெயரிடப்பட்டு சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான 
அதிகாரி தெரிவித்துள்ளார். 

Thirupathi

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு படிப்படியாக மாநில அரசாங்கங்கள் அறிவுரைப்படி பொதுமக்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து வருகின்றனர். இதற்கிடையே திருப்பதி திருமலையிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை 
முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Jalam

இதுகுறித்து பல்வேறு துறைகளின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் திருப்பதி திருமலையான் கோயில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அளித்த பேட்டியில், ஒரு மாதத்திற்குள் திருப்பதி மலையில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பயன்பாட்டை தடுக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார். திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான அலுவலகங்கள் அனைத்திலும் 15 நாட்களுக்குள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த தர்மா ரெட்டி, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் ”ஜல பிரசாதம்” அனைத்து இடங்களிலும் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Thirupathi

மேலும் திருமலையில் இருக்கும் ஹோட்டல்கள், உணவு விடுதிகளிலும் தேவஸ்தானத்தால் வழங்கப்படும் ஜலபிரசாதம் குடிநீர் பக்தர்களுக்கு கிடைக்க தேவையான ஏற்பாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்கிடையே இன்னும் 30 நாட்களுக்குள் மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் பயன்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு டோக்கன்களை இடைத்தரகர்கள் குறுக்குவழியில் பெற்று பலமடைந்து வருவதை தடுக்க டோக்கன் வினியோகத்தில் பார்கோடு முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என இவ்வாறு தெரிவித்தார்.