குடித்து விட்டு அதிவேகத்தில் காரை ஓட்டி வந்த மருத்துவர்கள்.. கண் இமைக்கும் நொடியில் நேர்ந்த சோகம்!

 

குடித்து விட்டு அதிவேகத்தில் காரை ஓட்டி வந்த மருத்துவர்கள்.. கண் இமைக்கும் நொடியில் நேர்ந்த சோகம்!

காரில் இருந்த ஏர்பேக் அதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு பேரை காப்பாற்றியுள்ளது.

 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பெங்களூரில் இருந்து வந்த கார் ஒன்று சோதனை சாவடியில் நிற்காமலே அதிவேகத்தில் சென்றுள்ளது. இதனையடுத்து போலீசார், செங்கம் காவல் துறையினருக்கு கார் ஒன்று வேகாமாக வருகிறது என்றும் அதனை நிறுத்துமாறும் கூறியுள்ளனர். 

ttn

அதன் படி செங்கம் போலீசார் அந்த காரை பின்னாலேயே துரத்தி சென்ற போது, மின்னல் வேகத்தில் ஓடிய அந்த கார் ஓட்டிச் செல்பவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கார் சுமார் 50 அடி வரை உருண்டு சென்று ஒரு இடத்தில் நின்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உள்ளே இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்று சோதனை செய்துள்ளனர். காரில் இருந்த ஏர்பேக் அதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு பேரை காப்பாற்றியுள்ளது.

 இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காரில் இருந்த அந்த இருவரும் மருத்துவர்கள் எனவும் குடித்து விட்டு போதையில் அதிவேகமாக காரை ஓட்டி கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், பாலகுமார் என்பவர் திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூயில் பணியாற்றி வருவதும், சிவபிரகாசம் என்பவர் கீழ்பெண்ணாத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரசால் நாடே உருக்குலைந்து இருக்கும் இந்த சூழலில், மருத்துவர்களே இவ்வாறு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.