குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் முதன் முதலாக 10 ஆயிரம் அபராதம் செலுத்திய இளைஞர்!

 

குடித்துவிட்டு  வண்டி ஓட்டியதால்  முதன் முதலாக 10 ஆயிரம் அபராதம் செலுத்திய இளைஞர்!

மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2019 சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் முதன் முதலாக சந்தோஷ் என்பவருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குடித்துவிட்டு  வண்டி ஓட்டியதால்  முதன் முதலாக 10 ஆயிரம் அபராதம் செலுத்திய இளைஞர்!

சென்னை : மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2019 சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் முதன் முதலாக சந்தோஷ் என்பவருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மக்களவையில் மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2019 ஒப்புதல் பெற்றுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 மீதான திருத்த மசோதாவாகக் கடந்த மாதம்  மோட்டார் வாகன சட்ட மசோதா 2019 ஒப்புதல் பெற்றுள்ளது.

அதன்படி புதிய மசோதாவின் அடிப்படையில் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட ’குடித்துவிட்டு வாகன ஓட்டும்’ குற்றத்துக்கு தற்போது அபராதத் தொகை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதேபோல், லைசென்ஸ் இல்லாமல் ஓட்டினால் முன்னர் 500 ரூபாய் அபராதமாக இருந்தது தற்போது 5 ஆயிரம் ரூபாயாக அபராதம் உயர்த்தப்பட்டது. சாலையில் ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2019 சட்டம் இயற்றப்பட்ட நிலையில் முதல் வழக்காக சந்தோஷ் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  குடித்து விட்டு வாகனம் ஓட்டிய  குற்றத்திற்காக இந்த  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையைச்  சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில்  செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.