குடித்துவிட்டு இதைச் செய்தால்…இனி உங்களால் வண்டியும் ஓட்ட முடியாது, ஃபாரீனுக்கும் போக முடியாது !

 

குடித்துவிட்டு இதைச் செய்தால்…இனி உங்களால் வண்டியும் ஓட்ட முடியாது, ஃபாரீனுக்கும் போக முடியாது !

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நடக்கும் அசம்பாவிதங்களைத் தடுக்க சென்னை மாநகர போலீஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளைஞர்கள் இரவு நேரத்தில் பைக் ரேஸ், குடித்து விட்டு வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில்,  இப்போதிலிருந்தே இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நடக்கும் அசம்பாவிதங்களைத் தடுக்க சென்னை மாநகர போலீஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

ttn

அதில், புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பிற்காகச் சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்படவும், சென்னையின் முக்கிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையங்கள் அமைக்கவும், விபத்து நடந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ttn

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ரோந்து படைகள் உருவாக்கவும் சென்னையில் உள்ள கடற்கரைச் சாலைகளில் குதிரைப் படை மற்றும் ரோந்து வாகனங்கள் அமைத்துக் கண்காணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ttn

குறிப்பாக, புத்தாண்டு கொண்டாடத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர்கள் வெளிநாடு செல்ல விசா உள்ளிட்டவை கிடைக்காமல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறையினர் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.