‘குடிகார தந்தையால் நடக்கும் குடும்ப சண்டை’-மனம் வெறுத்த மகள் தூக்கு ..

 

‘குடிகார தந்தையால் நடக்கும் குடும்ப சண்டை’-மனம் வெறுத்த மகள் தூக்கு ..

25 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவியும் மூன்று குழந்தைகளும் தீ விபத்தில் கொல்லப்பட்டபோது இரண்டாவதாக அமர்சிங் அவரின் தாயை மணந்தார். 
அப்போது மூன்று குழந்தைகளும் அவர்களது தாயும் சிங்கின் கொலைவெறிக்கு  பலியானதாகக் கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் சதர் பகுதியில் உள்ள தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பினர். மேலும், இப்போது இறந்த சிறுமி தனது தந்தைக்கு எதிராக  அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ஒரு  தற்கொலைக் குறிப்பையும் போலிசார் மீட்டனர்.

இறந்த பெண், தன் தந்தை அமர் சிங்கின் இரணடாவது மனைவியின் மகள் ஆவார்.  25 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவியும் மூன்று குழந்தைகளும் தீ விபத்தில் கொல்லப்பட்டபோது இரண்டாவதாக அமர்சிங் அவரின் தாயை மணந்தார். 
அப்போது மூன்று குழந்தைகளும் அவர்களது தாயும் சிங்கின் கொலைவெறிக்கு  பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது நண்பர்களோடு அடிக்கடி தங்கள் வீட்டில் மது விருந்துகளை நடத்துவார். அப்போது குடிபோதையில் சண்டைகள் நடப்பது ஒரு பொதுவான நிகழ்வாக மாறியது.

இப்போது இறந்த சிறுமி சம்பவ நாளில் தனது மதுவுக்கு அடிமையான தந்தையால் தாக்கப்பட்டுள்ளார். தனது தந்தையால் தாக்கப்பட்ட பின்னர், அவர் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது தற்கொலைக் குறிப்பில், தனது வீட்டின் நிலை குறித்து அவர் மிகவும் வருத்தப்படுவதாகவும், பல ஆண்டுகளாக நடக்கும் குடும்ப சண்டை காரணமாக வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இறந்த சிறுமியின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.