குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் – இயக்குநர் ராம்கோபால் வர்மா

 

குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் – இயக்குநர் ராம்கோபால் வர்மா

கர்நாடகாவில் 598 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று காலை முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் குடிமக்கள் கூட்டம் அலைமோதியது.

கர்நாடகாவில் 598 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று காலை முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் குடிமக்கள் கூட்டம் அலைமோதியது. மதுக் கடைகளில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்ற விதிகள் உள்ள போதிலும் ஒரு கி.மீ, தூரத்திற்கும் மேல் வரிசையில் நின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் 40 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட மதுபான கடையில் கூட்டம் அலைமோதியதால் பெண்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள கக்கடாஸ்புராவில் ஒரு மதுபான கடை முன்பு ஆண்களுக்கு நிகராக பெண்களும் வரிசையில் நின்று மதுவாங்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

 

 

இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா அவ்வப்போது சர்ச்சைகளில் மாட்டுறது மாதிரி கமென்ட் போடறது வாடிக்கை. அந்த வகையில் இப்போ போட்ட கமெட்டுக்கான பதில்கள் நெட்டிசன்களிடையே அனல் பறக்குது. ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதில், பாருங்க யாரு மதுபானக் கடையில் வரிசையில் நிற்கிறார்கள்? இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று பேசுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.