குடல் புழுக்களை அழிக்கும் பாகற்காய்

 

குடல் புழுக்களை அழிக்கும் பாகற்காய்

பாகற்காய் என்று பெயரில் மட்டும் தான் இது காய். மற்றபடி இது  பழ வகையைச் சேர்ந்தது. அதுவும் கசப்பான பழம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதற்கு  அப்படியே ஜூஸாக்கி சாப்பிடுவது தான் நல்லது. கசப்பு சுவை என்பதற்காக பாகற்காயை ஒதுக்கி விடாமல், சிறுவயது முதலே சாப்பிட குழந்தைகளைப் பழக்கி வர வேண்டும். அப்போது தான் கசப்பும் சுவையின் ஒரு அங்கம் என்பதை இயல்பாகவே அவர்கள் புரிந்துக் கொள்வார்கள்.

பாகற்காய் என்று பெயரில் மட்டும் தான் இது காய். மற்றபடி இது  பழ வகையைச் சேர்ந்தது. அதுவும் கசப்பான பழம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதற்கு  அப்படியே ஜூஸாக்கி சாப்பிடுவது தான் நல்லது. கசப்பு சுவை என்பதற்காக பாகற்காயை ஒதுக்கி விடாமல், சிறுவயது முதலே சாப்பிட குழந்தைகளைப் பழக்கி வர வேண்டும். அப்போது தான் கசப்பும் சுவையின் ஒரு அங்கம் என்பதை இயல்பாகவே அவர்கள் புரிந்துக் கொள்வார்கள்.

bitter gourd

கல்லீரலை வலுப்படுத்துவதில் பாகற்காய் பெரும் பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சார்ந்த பல நோய்களுக்கு பாகற்காய் ஒரு மருத்துவ உணவாகவே பயன்படுகிறது. நோய் தொற்றுக்களை தடுத்து உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல்  போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்து, குடல் ஆரோக்கியத்திற்கும்  பாகற்காய் கைகொடுக்கும். பாகற்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டது. நரம்புகளில் ஏற்படும் வீக்கத்தினால் உண்டாகும்  மன அழுத்தத்தை சீராக்கவும் பாகற்காய் உதவுகிறது. 

கண்பார்வையை மேம்படுத்துவதில் பாகற்காய் பெரும்பங்கு வகிக்கிறது. கண் பார்வை கோளாறுகள் என்றால் நாம் உடனே கேரட்டை தேடியலைகிறோம். கேரட்டில் இருப்பதை விட அதிக சத்துக்கள் பாகற்காயில் உள்ளது. சில குழந்தைகள் வயதுகேற்ற உணவை உட்கொள்ளாமல் தவிக்கும். குடல் புழுக்களின் பாதிப்பாக இருக்கலாம். வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிப்பதற்கு மருந்து மாத்திரைகளைத் தேடிச் செல்லாமல், பாகற்காயைப் பயன்படுத்தலாம். 

வாரம் ஒரு முறை பாகற்காயைச் சாப்பிடக் கொடுத்தால் குடலில் புழுக்கள் தங்காது.பாகற்காயின் இலை,விதை அனைத்துமே வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதை முக்கிய வேலையாகச் செய்கிறது.பாகற்காயை பச்சையாக ஜூஸாக்கி அருந்தும் போது கிடைக்கும் பலன்கள் சமைத்த பாகற்காயில் கிடைக்கும் பலன்களை விட மிகமிக அதிகம். 

bitter gourd

பாகற்காய் இலைகள்,காய் அதன் விதைகள் ஆகியவற்றை உலரவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று முதல் பதினைந்து கிராம் வரை பயன்படுத்தலாம். 300 கிராம் பாகற்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாகற்காயின் விதைகளை நொறுக்கி அதையும் இந்தப் பாகற்காய் துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இவற்றை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் எழுநூறு மில்லி தண்ணீர் ஊற்றவும். பின்னர் இதில் 1டீஸ்பூன் கடுகுப் பொடியை சேர்த்துக் கலவையை நன்கு கலந்து பாட்டிலின் வாயை ஒரு துணியால் கட்டிவிடவும்.

3 நாட்களுக்கு ஒருமுறை இந்தக் கலவையை கிளறிவிடவும். ஒருவாரம் கழித்து இந்தபாட்டிலில் சேகரமாகி இருக்கும் தண்ணீரை தனியாக எடுத்து 50 மிலியை ஒரு வேளைக்கு பருகவும். (ஒரு நாளைக்கு 50 மிலிபோதுமான அளவு) மறுநாள் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து அறை வெப்ப நிலைக்கு வந்த பிறகு அதே 50 மிலி அருந்தலாம்.

bitter gourd

பாகற்காயை வதக்கிச் சாப்பிட்டாலும், ஆவியில் வேக வைத்து சாப்பிட்டாலும் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். வறுத்து சாப்பிடுவதும், சிப்ஸாக செய்து சாப்பிடுவதும் பலன் கொடுக்காது. சமைக்கும் போது குறைவான தண்ணீரை பயன்படுத்தி சமைக்க வேண்டும்.பாகற்காய் ஜூஸ் சாப்பிடுபவர்கள் அதனுடன் எலுமிச்சை , இஞ்சி, மிளகு  போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதன் கசப்பு தன்மை சற்று மட்டுப்படும்.