குஜராத் சிறையில் துன்புறுத்தப்படுத்தப்படும் முகிலன்?

 

குஜராத் சிறையில் துன்புறுத்தப்படுத்தப்படும் முகிலன்?

சூழியல் போராளி முகிலன் குஜராத் சிறையில் துன்புறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூழியல் போராளி முகிலன் குஜராத் சிறையில் துன்புறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவர் கதி என்ன என்பதே கேள்விகுறியாகவுள்ளது. சூழலியல் போராளி, சமூக ஆர்வலர், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் முகிலன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சொந்த ஊராக கொண்ட இவர் தமிழர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளிலும் போராட்டங்களிலும் முன்னின்று குரல் கொடுப்பார். கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் இருந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வரை அப்பாவி பொதுமக்களாக போராட்டங்களை முன்னெடுத்தவர்.கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட முகிலன் பின்னர் வீடு திரும்பவில்லை. போலீஸ், சிபிசிஐடி என யாருக்கே முகிலன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் சமூக போராளி முகிலன் குஜராத்தில் இருப்பதாகவும் அங்குள்ள ஒரு சிறையில் அவர் துன்புறுத்தப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.