குஜராத் கலவர வழக்கு மீண்டும் உயிர் பெறுகிறது.!

குஜராத் கலவர வழக்கு மீண்டும் உயிர் பெறுகிறது.!

2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டியில் இருந்த 59 பேர் எரித்துக் கொல்லப்பட்ட மறுநாள் நடந்தது, குல்பர்க் சொசைட்டி படுகொலைகள்,முன்னாள் எம்பி எசான் ஜெஃப்ரி உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர். 

zakria-jafri

இந்த வழக்கில் அன்றைய குஜராத் முதல்வர் மோடி உட்பட 63 பேர்மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு ( எஸ்.ஐ.டி ) 2012 ஃபிப்ரவரி 18-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட மோடி உட்பட்ட 63 பேர்மீதும் குற்றமில்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதற்குப் பிறகுதான் மோடி தேசிய அரசியலுக்கு வந்தார்.

இந்த வழக்கில் கொல்லப்பட்ட இஸ்லாமிய எம்.பி எசான் ஜாஃப்ரியின் மனைவி ஜக்காரியா ஜாஃப்ரி எஸ்.ஐ.டியின் அறிக்கையை எதிர்த்து நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம் கன்னில்கர்,தினேஷ் மகேஷ்வரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் ஹோலி பண்டிகைக்கு பிறகு விசாரணைத் தேதியை வைக்கும்படி அரசு வழக்கறிஞர் கோரினார்.ஜக்காரியா ஜாஃப்ரியின் வழக்கறிஞர் அபர்னாபட் இதை எதிர்த்தார்,இதைத் தொடர்ந்து ‘ இந்த வழக்கை எப்படியும் ஒருநாள் கேட்டுத்தானே ஆக வேண்டும்,அதனால் உடனே கேட்டு விடுவோம்’ என்று சொன்ன நீதிபதிகள் வருகிற ஏப்ரல் 14ம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்து இருக்கின்றனர்.

மகாராஷ்ட்ரா மோதல்களுக்குப் பிறகு அமித்ஷாவுக்கு எதிரான கேஸ்கள் மீண்டும் விசாரிக்கப்படும் என்று சிவசேனா அரசு ஏற்கனவே அறிவித்து இருக்கும் நிலையில் இந்த விசாரணை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.