குஜராத்தில் போலீசார் மீது மலர் தூவி நன்றி தெரிவித்த குடியிருப்புவாசிகள்… 2 மாதத்துக்கு முன்னால் நடந்த சம்பவமே வேற…

 

குஜராத்தில் போலீசார் மீது மலர் தூவி நன்றி தெரிவித்த குடியிருப்புவாசிகள்… 2 மாதத்துக்கு முன்னால் நடந்த சம்பவமே வேற…

குஜராத்தில் 2 மாதங்களுக்கு முன் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய அதே குடியிருப்புவாசிகள் தற்போது நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் மீது மலர் தூவி வரவேற்றனர்.

காலம் மனிதர்களை மாற்றி விடும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரண சம்பவம் ஒன்று குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஷா இ ஆலம் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. கடந்த 2  மாதங்களுக்கு முன் அந்த பகுதியில் நடந்த என்.ஆர்.சி.-சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி பலத்த காயம் அடைந்தார்.

குஜராத் போலீஸ்

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நேரத்தில், இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் காவல், சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்களை நாட்டின் அனைத்து பகுதிகளில் பாராட்டி வருகின்றனர். அது போன்ற சம்பவம்தான் ஷா இ ஆலம் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

குஜராத் போலீஸ்

நெருக்கடியான நேரத்தில் தங்களது உயிரை பயணம் வைத்து பணியாற்றும் காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஷா இ ஆலம் குடியிருப்புவாசிகள்  போலீசார் மீது மலர் தூவி வரவேற்றனர். கடந்த 2 மாதங்களுக்கு இந்த பகுதியில் நடந்த கல் வீச்சு சம்பவத்தில் காயம் அடைந்த போலீஸ் அதிகாரியையும் மலர் தூவி குடியிருப்புவாசிகள் வரவேற்றனர்.