‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

 

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

சனி, ஞாயிற்றுக்கிழமைன்னா, ரெண்டு ஐபிஎல் மேட்ச் நடக்கும். மத்தியான மேட்ச் முடிஞ்ச உடனே, அடுத்த மேட்ச் ஆரம்பிச்சிடும். அதுபோல தான் நேற்றும் இன்றும் பிக்பாஸ் பரபரன்னு இருந்துச்சு. டீ பிரேக் போல வெளியில விட்டா, அங்கே வந்தும் பஞ்சாயத்தைப் பத்திதான் பேசிட்டு இருக்காங்க. ஒரே ஒரு குறைதான். வழக்கமா ஐபிஎல் மேட்ச் நடந்த சி.எஸ்.கேவை சப்போர்ட் பண்ணி ஆட்டத்தைப் பார்ப்போம். இஙே யாரை சப்போர்ட் பண்றதுன்னு குழப்பம். ஓவியா மாதிரி எல்லோரின் ஃபேவரைட் இல்லாதது சப்போர்ட்டருக்கு இழப்புதான்.

31-ம் நாள்

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

முதன்நாள் சாமபேத தண்டம் எல்லாம் யூஸ் பண்ணினேனு சுரேஷ் சொன்னதால, மன்மதன் அம்புலேருந்து பாட்டை ஒலிக்க விட்டார் பிக்பாஸ். நாம சொல்லித்தான் போட்டிருக்காருன்னு புரிஞ்சிகிட்ட சுரேஷ், டான்ஸ்க்கு ட்ரை பண்ணினார். போதும்… போதும்ன்னு டப்னு பாட்டை ஆஃப் பண்ணதியதும் ‘தேங்க் யூ பிக்பாஸ்னு கேட்ட குரல் ஆடியன்ஸோடது.

முதல் நாள் ஆஜித் பாட்டு கிளாஸ், அடுத்த நாள் ஷிவானியின் நவரச கிளாஸ், இன்னிக்கு சுரேஷின் ஜோசியம் பார்த்தல். ’எனக்கு இதெல்லாம் நம்பிக்கை இல்லை’னு ஒரு டிஸ்க்லைமர் போட்டார் சுரேஷ். பெரியாரைப் படிச்சிருக்கேன் என்பதை மெயிண்டைன் பண்றாரா… நிஜமாகவே அப்படியான்னு ஒரு குழப்பம்.

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

‘இந்த வாரத்திலேயே நீ போனாலும் போய்டுவே’னு காலையிலேயே நல்ல வாக்கு சொன்னது சோம்ஸ்க்கு. அதையும் பெப்பட் மாதிரி தலையாட்டிட்டு கேட்டுட்டு இருந்தார். அடுத்து நிஷாவுக்கு, ‘பிக்பாஸ்க்கு கிளம்பற அவசரத்துல தன்னம்பிக்கையை வீட்டுலே மறந்து வெச்சிட்டு வந்துட்டாங்களாம்’ நெக்ஸ்ட்… இதுவும் ஆடியன்ஸ் குரல்தான்.

‘நீ டேஞ்சர்தான்… ஆனா, இந்த குழந்தைகளுக்கு இல்லனு மாதிரி ரம்யாவைப் புகழ்ந்திட்டு இருந்தார் சுரேஷ். அநேகமாக ரம்யா ஆர்மியின் முதல் ஆளே அவர்தான் போல. எல்லோரும் வலுக்கட்டயமாக அனிதாவை அனுப்ப, ‘நீ பிரதமரே ஆகற வாய்ப்பிருக்கு’னு எஸ்கேப்பாயிட்டார் சுரேஷ். ’ஆகா.. அது நடக்குமா… டெல்லி பக்கம் போலாமா’ என்றுகேட்பதுபோல ரியாக்‌ஷன் காட்டினார் அனிதா. ஓகே நெக்ஸ்ட். இப்ப ஆடியன்ஸ் சொன்னது அடுத்த ஆளை வரச் சொல்லி இல்ல. வேற சீன்க்கு போங்கன்னு.

பஞ்சாயத்து நம்பர் 3

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

பாலா மீது பிராது கொடுத்தது சோம்ஸ். ‘என்னை ஏன் பெப்பட்னு சொன்னாருன்னு கேட்டு சொல்லுங்க ஜட்ஜம்மா’னு சுருக்கமா பேசினாரு சோம்ஸ். கண்ணாடியைச் சரிசெஞ்சுகிட்டே (ஆஹான்) ’நீங்க சொல்லுங்க பாலா’ சொன்னார் ஜட்ஜ் சுசித்ரா.

‘உள்நோக்கத்துல அந்த வார்த்தையைச் சொல்ல. இன்ப்ளுயன்ஸ் பண்றாங்கனு சொன்னதும், கமல் வெளியே ஆடியன்ஸ்கிட்ட கேட்டு ஒப்புதல் கொடுத்தாருனு கமலையும் பஞ்சாயத்துக்கு இழுத்துட்டு வந்தார் பாலா. இரண்டு தரப்புக்கும் சப்போர்ட்டர்ஸ் கூப்பிட, பாலாவுக்கு யாரும் வரல. சோம்ஸ்க்கு ஒரு குரூப்பே வந்திருந்தது.

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

‘பெப்பட் என்பது முதுகெலும்பு இல்லாத, சுயபுத்தி இல்லாத, மூளையே இல்லாத என்று சொல்றதுக்கு அர்த்தம்’என பன்ச் குத்தினார் சுரேஷ். ‘ஓ! இவ்வளவு அர்த்தம் இருக்கா… மிரண்டு பார்த்திட்டு இருந்தார் சோம்ஸ்.

சனம் பேச ஆரம்பிச்சவுடனே ஜட்ஜ்ம்மா சத்தம் போட்டு, சைலண்டா இல்லாட்டி வெளியே அனுப்பிடுவேன்னு கேரக்டர்க்குள்ள உருமாறி சந்திரமுகியா மாறியிருந்தாங்க.

‘பாலாவைப் பட்டிமன்றத்துல குழந்தைன்னு சொன்னதும், அது வெளியில பேர் கெட்டுபோய்டும்னு பயந்தவரு… பெப்பட் சொன்னா, சோம்ஸ் பெயர் கெட்டு போய்டாதா’ என சோம்ஸ் தரப்பு கேட்க, ஜட்ஜ் வாக்கெடுப்பு எடுத்து சோம்ஸ் வெற்றி பெற்றதா அறிவிச்சாங்க. ரியோ உள்ளிட்ட பலர் ஜட்ஜ்க்கு பறக்கும் முத்தங்கள் வீசினாங்க. ஜட்ஜ் ரியாக்‌ஷன் என்னனு காட்டல.

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

பஞ்சாயத்து முடிஞ்சதும் பாலா, ‘அழுவுலையே கண்ணு வேர்த்துச்சு’னு சொல்ற மாதிரி ‘சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்’னு பன்ச் டயலாக் பேசிட்டுபோனார். கேட்கத்தான் ஆள் இல்ல.

’நீ பாட்டுக்க கம்னு இரு’னு சனம்க்கு அட்வைஸினார் அர்ச்சனா. நேத்துதான் கொடலை உருவிடுவேன்னு சண்டை போட்டுட்டு இருந்தீங்களே ரெண்டு பேரும். எப்போ சமாதான புறாவைப் பறக்க விட்டீங்க.

பஞ்சாயத்து நம்பர் 4

இடைவெளிக்குப் பிறகு, அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுக்காக ஆரி மீது பிராது வாசித்தார் சம்யுக்தா. ‘தான் கார்னர் பண்ணப்படறதா சொல்றார். ஆனா, இவர்தான் குரூப்பிஸம் பண்ணிட்டு இருக்கார்’னு சொன்னதுதும், ஆரியின் வீர முழக்கம் தொடங்குச்சு. சுருக்கமா சொல்ல முடியாதது அவர் இயல்பு போல, உதாரணத்திற்காக தறுதல… தறுதல.. என நடித்துக்காட்டுவதாக சம்யுக்தாவைப் பார்த்து கத்த, அது தனி பஞ்சாயத்தானது.

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

ஆரி, சப்போர்ட்டராக, சோம், அனிதா, ஷனம் வர, சம்யுக்தாவுக்கு பாலாவும் துணைக்கு ஷிவானியும் வந்தார்கள். ’கேப்டன் டாஸ்க்ல ஒரு பொண்ணுன்னு விட்டுக்கொடுத்தாங்க என்பதை ஏத்துக்கிறீங்களா’னு அனிதா, சம்யுக்தாவைக் கேட்க, பாலா எகிற ஆரம்பிச்சார்.

குளோசிங் வக்கிலா பாலா பேச வாய்ப்பு தர, “இவர் வாயை மட்டும்தான் வெச்சிகிட்டு பிக்பாஸ்க்கு வந்திருக்காரு’னு சொல்ல, ‘போரிங் என்பதை அவர் அட்வைஸ் பண்றதை வெச்சு எப்படி கொடுப்பீங்க’னு ஆரம்பித்து அனிதா பேச்சு ஆசம். எல்லாத்தையும் விடிய விடிய கேட்டுட்டு சம்யுக்தாவை ஜெயிச்சதா சொன்னார் சுசித்ரா இல்ல இல்ல ஜட்ஜ் சுசித்ரா.

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

சம்யுக்தாவைப் பார்த்து நடித்து காட்டுவது போல தறுதல… தறுதலன்னு சொன்னது ஆரியின் தவறு என்றால், ‘ஒரு பொண்ணுகிட்ட பேசத் தெரியல.. இவன் எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துட்டான்’னு சம்யுதா சொன்னதை என்னன்னு சொல்றது.

ஆனா, இப்படி ஒருமையில பேசுன நபரா இவருன்னு கேட்கிறது மாதிரி ‘ஆரியும் நானும் சமாதானம் ஆகிடுறோம்னு மினி பஞ்சாயத்தைக் கூட்டினார் சம்யுக்தா. ஆனா, அவர் பேச ஆரம்பிக்கும்போது, ‘கேப்டனா ஆவறதுக்கு ஐஏஎஸாகப் படிக்கணும்னு கேட்டதும், பாலாவும் ’ஜட்ஜ்’ சுசித்ராவும் கைக்கொட்டி சிரிச்சதும், டென்ஷனாகிட்டார் ஆரி. பாலாவைப் பிடிபிடின்னு சண்டை இழுக்க, பாலாவும் மல்லுக்கட்டினார். ‘நீதான் பேக்.. இல்ல நீதான் பேக்’னு சொல்ல ஒரே களேபாரம்தாம்.

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

ஆனா, இந்த கேப்லேயும், ‘பார்த்துக்கங்க நான் சமாதானம் ஆக நினைச்சேன். ஆரிதான் பிரச்னை பண்ணிட்டார்னு’ சம்யுக்தா சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமாக இருந்துச்சு. இந்த கேப்டன்ஷிப்க்கே இந்த நடிப்பு காட்ட நினைக்கிறாங்களே… கவுன்சிலராயிட்டா… பாவம்யா அந்தத் தொகுதி மக்கள். ஆனா, பஞ்சாயத்து பாலா கைத்தட்டியதால்தான் கெட்டுப்போச்சு என சரியாகப் புரிஞ்சிகிட்டவர் ரம்யாதான்.

பஞ்சாயத்து நம்பர் 5

’தாத்தா மீது புகார் அளித்த பேத்தி’ இப்படித்தான் தலைப்பு வைக்கணும். ‘ஓவர் ஆக்டிங் காட்டறாரு’னு ஒரு புகார். (ஏம்மா, நீங்கதான் ஆக்டிங்கே காட்டல அவராவது காட்டட்டுமே)

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

கேபி சொல்லும்போதே இது விளையாடு பஞ்சாயத்து என நினைத்தேன். ஆனா, இதுதான் வினையாக மாறிடுச்சு.

நான் ஓவர் ஆக்டிங் செய்யலனு சுரேஷ் விளக்கிச் சொல்ல, அனிதா பஞ்சாயத்து பற்றி சொல்ல ஆரம்பிச்சதுமே உஷாராயிட்டாங்க அனிதா… என்னைய இழுக்காதீங்கனு தெளிவாக அழுத்தமா சொன்னது சூப்பர். கேபி சப்போர்டர்ஸ் ரியோ, சம்யுக்தா, ரமேஷ் (உள்ளதான் இருங்கீங்களா பாஸ்), சோம்ஸ். சுரேஷ்க்கு ரம்யா, ஷனம்.

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

இரு தரப்புலேயும் காரசாரமாக வாதங்கள் வைத்ததும், இறுதியாக குளோசிங் வக்கில் கேபிக்கு ரியோ, சுரேஷ்க்கு ரம்யா. ’தாத்தா எப்பவுமே கொளுத்து போடுவாரு’ என்பதாக ரியோ பேசி முடிக்க, ‘அவர் தன் உணர்வுகளை ஓவர் ஆக்டிங்காக காட்டறாரு. இங்கே ஒவ்வொருத்தரும் தனி மனிதர்கள்தாம்’னு பாயிண்ட் பாயிண்ட்டா ரம்யா பேசிமுடிப்பதற்குள், சம்யுக்தா புகுந்து கருத்து சொல்லிட்டு இருந்தார்.

குளோசிங் வக்கில் பேசும்போது திடீர்ன்னு எதிர் தரப்பில் பேசறது சரியானு ரம்யா கேட்டதற்கு ஜட்ஜ்கிட்டேயிருந்து பதில் இல்லை. ’குசும்பு’ என்ற வார்த்தையை சம்யுக்தா பயன்படுத்த, அந்த சுரேஷ்க்கு குசும்பு இருக்குனு எத்தனை பேர் ஓட்டு போடறீங்கனு ஜட்ஜ் கேட்க, ஓரிருவர் தவிர எல்லோரும் கைத்தூக்கினார். அதற்கு அப்பறம்தான் அதுக்கு என்னா மீனிங்னு கேட்டாங்க.

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

‘எலிமினேஷன்னா என்னங்கய்யா’னு படிக்காத கஞ்சா கருப்பு கேட்ட மீம்ஸ் போடுவீங்க, படிச்ச ஆளுங்க அர்த்தம் தெரியாம ஓட்டுபோட்டுட்டு கேட்டா ஒண்ணும் பண்ண மாட்டீங்க. ஓட்டெடுப்பின்படி கேபி ஜெயிச்சதாக அறிவித்தார் ஜட்ஜ். எல்லாத்தையும் ஓட்டெடுப்பு படின்னா, எதுக்கு வீண் வாதம். பிராதை வாசிச்சவுடனே ஓட்டெடுத்து தீர்ப்பைச் சொல்லிட வேண்டியதுதானே.

குசும்பு என்ற வார்த்தை சுரேஷை ரொம்பவே காயப்படுத்துடுச்சு. பாலாவுக்கு எதிரா சுரேஷ் பேசியதால் பாலாவின் தயவால் கேப்டானான சம்யுக்தா தன்னை அட்டாக் பண்ணியதாக சுரேஷ் நினைக்கிறார். (எப்பாடி இதை எழுதவே கஷ்டமா இருக்கே…)

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

பிக்பாஸிடம் தனியே ஜட்ஜ் பற்றியும் கேப்டன் சம்யுக்தா பற்றியும் புகார் வாசித்தார் சுரேஷ். இன்னொரு பக்கம், அடுத்து ரசத்தை ஊத்துன்னு ஷிவானி – பாலா ரொமான்ஸ் போய்ட்டு இருந்துச்சு. காதல் வழிய வழிய ஏதோ ஊட்டிக்கொண்டிருந்தார் ஷிவானி. கேபி, ஆஜித்தும் தூரமாக இருந்து கிண்டலடித்து கொண்டிருந்தார்.

கேபி மீது சுரேஷ் கோபமாகி, ‘நான் ஓவர் ஆக்டிங் பண்றேன்ல… இனிமே எங்கிட்ட பேசாதே’ எனச் சொல்ல ஷாக்கான கேபி கெஞ்ச, ‘இனி நான் உங்கிட்ட பேசினா, கால்ல கிடக்கறதால அடி’ என்றதும் தவித்தார் கேபி.

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

இவ்வளவு களேபாரத்திலேயும் ஷிவானி ஊட்டிவிடுறது நிக்கல.’ஊரே பற்றி எறிஞ்சாலும் இவங்களுக்கு கவல இல்லன்னு’ சொல்ற அளவுக்கு அவங்க ரொமான்ஸ் போய்ட்டு இருந்துச்சு.

எல்லா பிக்பாஸ் சீசன்களைப் பார்த்தேனு சுரேஷ் ஒருமுறை சொன்னார். ஆனா, அதன் ஸ்ட்டேர்ஜி தெரிஞ்ச ஆள் பாலாதான். தான் சத்தம் போட்டு கத்தி சண்டை இழுத்தா நம்மை வெளியே அனுப்ப மாட்டாங்க. அப்பறம் ரொமான்ஸ் காட்சியிலேயும் இறங்கிட்டா, நூறாவது நாள் நெருங்குவரை பிரச்னை இல்லைன்னு தெளிவாக ரூட்டைப் போட்டுட்டு இருக்கார். அவரை இதுவரை பிக்பாஸ் வீட்டுல காட்டினதிலிருந்து வந்த ஒர் எண்ணம், பாலா எந்த செண்டிமெண்ட்டை மதிப்பதே இல்லை. எல்லாமே பாஸிங் க்ளவுடுதான்.

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

’வாக்கிங் போனா டென்ஷன் குறையும்னு ஒரு மகான் சொன்னார்’ என ஆஜித் அவர் பிறக்கறதுக்கு முன்னாடி உள்ள ஜோக்கை ஆரம்பிச்சார். ‘யாரு பாலாவா?’எனக் கேட்டதும் ‘இல்ல நான்தான்’னு சொல்லி முடித்தார். ஆனா, நமக்குத்தான் முடியல…

இந்தப் பஞ்சாயத்துக் காட்சிகளால் சிலர் தங்களின் தெளிவான வாதங்களை முன்வைத்ததைப் பார்க்க முடிந்தது. பாலா, அனிதா, ரம்யா, ரியோ, சுரேஷ், ஷனம் உள்ளிட்டோரையும் எமோஷனாகி பாயிண்ட்டை மிஸ் பண்ணுபவர்களாக அர்ச்சனா, சம்யுக்தா, ஆரியைப் பார்க்க முடிந்தது. வழக்கம்போல நிஷா, ரமேஷ், ஆஜித் எல்லாம் செட் பிராப்பர்ட்டியாகவே இருந்தார்கள். நிஷாவாது ஷனம்க்கு ஆதரவாக ஓரிடத்தில் பேசினார். மற்ற இருவரும் ஆங்காங்கே இடத்தை நிரப்பினார்கள். அவ்வளவே!

‘குசும்பு’ சுரேஷ், ’பெப்பெட்’ சோம்ஸ், ’கார்னர்’ ஆரி.. விசித்திர வழக்குகள்! பிக்பாஸ் 31-ம் நாள்

மணி 12-யைக் கடந்து லைட்ஸ் ஆஃப் பண்ணல என்றதுமே யாருக்கோ பர்த் டே என்று யூகிக்க முடிந்தது. சம்யுக்தா மகனுக்குப் பிறந்த நாள். வீடியோ திரையிட சம்யுக்தாவின் அழுகையோட லைட்ஸ் ஆஃப் பண்ணி, பின்கதைப் பாட்டைப் பாட தொண்டையைச் செருமினார் பிக்பாஸ். அமைதி.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.