குக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது..! இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்

 

குக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது..! இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னமாக  ‘பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னமாக  ‘பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குக்கர் சின்னம் 

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.ம.மு.க என தனி அமைப்பைத் துவங்கி நடத்தி வரும் டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து, அவரின் ஆதரவாளர்கள், வரும் மக்களவை தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் களம் காண்கின்றனர்.

டிடிவி

இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால், தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் அனைவருக்கும் பொதுவான சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி, தினகரன் சார்பில் கோரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், இதுகுறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று 300 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

பொதுச்சின்னம் ஒதுக்கியது 

அ.ம.மு.க-விற்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தினகரன் தொடர்ந்த வழக்கில், அதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஆனால், ஏதாவது ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த நிலையில், அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை நிராகரித்த தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை வழங்கியுள்ளது.

டிடிவி

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னமாக  ‘பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் ஒரே சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இதையும் படிங்க 

மக்களவை தேர்தலில் சரிதா நாயர் போட்டி; கேரள அரசியலில் பரபரப்பு!